Sunday, December 23, 2012

ivar pola yaar endru oor sollavaendum

 24 டிசம்பர்  மக்கள் திலகம் நினைவுதினம்.  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல  யாரென்று  ஊர் சொல்லவேண்டும். சொல்லியபடியே வாழ்ந்தவர்.  

 நினைத்து  பார்க்கிறேன்.  1965-66 களில்  எங்க வீட்டு பிள்ளை  திரையுலகை கலக்கி பேயோட்டம் ஓடிய படம்.  புதுவை  அஜந்தா திரை அரங்கில் 100 நாள் ஓடி  100வது நாளைக்கு  மக்கள் திலகம்  மட்டும் ஏனைய  கலைஞர்களும் 
மேடையில் தோன்றினார்கள். 

அரங்கம் நிறைந்து  பின் தெருவெல்லாம் திருவிழா கூட்டம் . அப்போது புதுவை  இன்று போல் வளர்ச்சி அடையவில்லை. அஜந்தா திரை அரங்கிற்கும் முத்தியால்பேட்டை ஊருக்கும் இடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே இருக்காது. மக்கள்  கூட்டம்  முத்தியால்பேட்டை  மணி கூண்டிலிருந்து  காந்தி ரோடு பெருமாள் கோவில் வரை  நீண்டிருந்தது .
திரை அரங்கினில் உள்ளேதான் கலைஞர்களுக்கு  பாராட்டும் பரிசளிப்பும் கூடியுள்ள  கூட்ட்டத்தை  கண்ட காவல் துறையினர்  உடனே  வெளியே 
ஏற்பாடு செய்தனர் 

எனது அப்பா  ராதா  அங்கு மேலாளராக  பனி புரிந்ததால்  நிகழ்ச்சி அனைத்தும் அவர் பொறுப்பிலே .  அதனால் எனக்கும் அரங்கினில் செல்ல  சிறப்பு அனுமதி கிடைத்தது.  நிகழ்ச்சி முடிந்ததும்  திரை அரங்கினின் மேல்பகுதியில் 
கலைஞாகள் மற்றும் சிறப்பு  அழைப்பாளர்களுக்கு  விருந்து.   mgr  sarojadevi
nagesh matrum  சில பேருடனும்  நானும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.  அன்று 
என் சக மாணவர்கள் மத்தியில் எனது மதிப்பு ஜிவ்வென்று ஏறியது .

இருந்தாலும் அன்றைக்கு  எனக்கு ஒரு அலட்சிய மனோபாவமே இருந்தது. 
ஏனென்றால்  அப்போதே நான் நடிகர் திலகத்தின்  தீவிர விசிறி.  மக்கள் திலகத்திற்கு  அளிக்கப்படும் அந்த மாபெரும் மரியாதைகள்  அந்த வயதில் 
நடிகர் திலகத்திற்கு எதிரானது போன்று  எனக்கு தோன்றியது. 

ஒருபக்கம் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் நான் மக்கள் திலகத்துடன் இருக்கிறேன்  என்ற பெருமையாய் இருந்தாலும்   ஒரு  சிவாஜி ரசிகன் அப்படி 
அங்கு  நிற்கலாமா  என்ற குற்ற உணர்சியுடன்  நின்றேன்.  

அதை இப்போது நினைத்தாலும்  அவமானமாக இருக்கிறது.  எப்பேர்பட்ட மனிதர் அவர்.  ஒரு முறை வெளிநாட்டினர் மக்கள் திலகத்தை சந்தித்து 
தமிழ்படம் பார்க்க வேண்டும்  என்ற விருப்பத்தை தெரிவித்தனர் . 
எல்லோரும்ம் அவர் படத்தைதான் போடுவார் என்று நினைத்தனர். மாறாக 
அவர்களுக்கு தில்லான மோகனம்பா ள்  படத்தை திரையிட்டு காண்பித்தார். 
அதோடு மட்டுமில்லாமல்  நம்முடைய தமிழனின் திறமையை அறிய 
தம்பி சிவாஜி யின்  படம்தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார் 

இன்றளவும் நான் சிவாஜியின் தீவிர விசிறியாய் இருந்தாலும்  மக்கள் திலகம்  என் இதயத்தின் ஓரிடத்தில்  சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். .

                                                                  ---

சம்மதமா  நான் உங்கள் கூட வர சம்மதமா என்று பாடியவரை ஞாபகம் .
இருக்கிறதா . அவருக்கும் இன்று அதாவது 24 டிசம்பர் நினைவுதினம். 
யார் தெரிகிறதா  திருமதி பானுமதி ராமகிரிஷ்ணாதன். 

No comments:

Post a Comment